கொரோனா: இன்று 20 பேர் சாவு

பெங்களூரில் நவ.. 21
கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று ஆயிரத்து 799 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்
20 பேர் பலியானார்கள்.
பெங்களூரில், கடந்த 24 மணி நேரத்தில் 972 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, பெங்களூரில் இன்று ஒரே நாளில் 10 பேர் பலியானார்கள். அதேசமயம் பெங்களூரில் இன்று 813 பேர் குணமடைந்து வீடு திரும்பினார் கர்நாடக மாநிலம் முழுவதும் இந்த தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருவது மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தி உள்ளது