கொரோனா தடுப்பு – அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்


பெங்களூர்.ஏப்.19
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் தடுக்க பாஜக அரசு என்ன செய்துள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிக்க உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிவித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு தொற்று தடுக்க உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தை சித்தராமையா.
வலியுறுத்தியுள்ளார் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள சித்தராமையா கொரோனா, இரண்டாவது அலை நாளுக்கு நாள் அபாயகரமாகி வருவதாகவும், மாநில பாஜக அரசால் தொற்று பரவுவதை தடுக்க முடியவில்லை என்றும் கூறி உள்ளார். கொரோனா தடுப்பில் அரசு தனது தோல்வியை மறைக்க முயற்சி செய்து வருவதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்
அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,. இந்த நேரத்தில் முதல்வர் மருத்துவமனையில் இருக்கிறார்
மாநில பாஜக அரசு ஐ.சி.யுவில் உள்ளது. வேண்டும் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரு வருடம் முன்பு கொரோனா முதன்முறையாக தாக்கப்பட்டபோது, ​​அது எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வருட அனுபவத்துடன், கொரோனாவை எதிர்கொள்ள மாநில அரசு தன்னை தயார்படுத்தியிருக்க வேண்டும் ஆனால். பாஜக அரசு கொரோனாவை முன்வைத்து ஊழலைப் செய்துள்ளது என்று சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார்
அமைச்சர்களும் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில பாஜக அரசின் வழிகாட்டுதல்களை வெளிப்படையாக மீறுகின்றனர். அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்களின் அராஜகமே தற்போதைய நிலைமைக்கு காரணம் என்று சித்தராமையா கூறியுள்ளார்