கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிரம் காட்ட வலியுறுத்தி- சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம்


திருப்பூர்,ஏப்ரல்.28-
கொரோனா தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக மேற்கொள்ள வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியம் வாவிபாளையம் கிளை சார்பில்
நேற்று காலை 10 மணிக்குநெருப்பெருச்சல்,ஜி.என் கார்டன்,
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பும்,மாலை 06.30 மணிக்கு திருப்பூர், 15 வேலம்பாளையம் நகர குழு சார்பில் ரங்கநாதபுரத்திலும் தனிநபர் இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெருப்பெருச்சல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ(எம்) கிளை செயலாளர் அழகு மற்றும் 15 வேலம்பாளையம்
,ரங்கநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ(எம்) நகர குழு உறுப்பினர் லட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
கொரோனா தொற்று தொடர்பான பாதிப்புகளிலிருந்து அரசு பொதுமக்களை காத்திடும் வகையில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் ! கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தவேண்டும் ! பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்தவேண்டும் ! பொதுமக்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் ! உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.