கொரோனா தினசரி பாதிப்பு 16,906 ஆக உயர்வு

புதுடெல்லி, ஜூலை 13-இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்பு 13,615 ஆக இருந்த நிலையில் இன்று 16,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 36 லட்சத்து 69 ஆயிரத்து 850 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 15,447 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 11 ஆயிரத்து 874 ஆக உயர்ந்தது. தற்போது 1,32,457 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,414 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 45 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியா னவர்கள் எண்ணிக்கை 5,25,519 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 11,15,068 டோஸ்களும், இதுவரை 199 கோடியே 12 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 86.77 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,59,302 மாதிரிகள் அடங்கும்.

https://www.maalaimalar.com/news/national/tamil-news-ex-ips-in-gujarat-riots-case-officer-arrested-485254?infinitescroll=1