கொரோனா தொற்று அதிகரிப்பு

புது டெல்லி : டிசம்பர். 29 – நாடு முழுக்க நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பால் இதுவரை நான்கு பேர் இறந்திருப்பதுடன் 702 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் கர்நாடகா , கேரளா , வங்காளம் மற்றும் டெல்லியிலிருந்து தலா ஒருவர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் 22 அன்று இந்தியா முழுக்க ஒரே நாளில் 752 புதிய கொரோனா புகார்கள் பதிவாகியுள்ளன. இதன் பின்னர் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா உருமாறிய ஜி என் 1 கிருமிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது . டிசம்பர் 8 அன்று இந்தியாவில் கேரளாவில் முதல் முறையாக இந்த உருமாறிய கிருமி தென்பட்டது. பின்னர் இதுவே குஜராத் உட்பட வேறு எட்டு மாநிலங்களில் தென்பட்டுள்ளது. கர்நாடகா , கோவா , மஹாரஷ்டிரா , ராஜஸ்தான் , தமிழ்நாடு , தெலுங்கானா , மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பொது மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். தவிர ஜனவரி மாதத்தில் இந்த தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சுகாதார துறை எச்சரித்துள்ளது. இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஏற்கெனவே அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோய் அடையாளங்கள் மிகவும் குறைவாகவே தென்படுவதால் மிக குறைந்த அளவிலேயே மறுத்த்துவமனையில் நோயாளிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 2020 துவக்கத்தில் ஆரம்பித்த இந்த கொரோனா தொற்று அப்போது தொற்றின் வீரியம் அதிகமாக தென்பட்ட நிலையில் நாடு முழுக்க சுமார் நான்கு வருடங்களில் 4.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்புகளுக்குள்ளாயினர் என்பதோடு 5.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வலைதளத்தின் படி நாடு முழுக்க தொற்றிலிருந்து மீள்பவர்கள் சதவிகிதம் 98.8 சதவிகிதமாகும். நாட்டில் இதுவரை 220 கோடிக்கும் அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதே வேளையில் கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா புகார்கள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 158 கொரோனா புகார்கள் பதிவாகியுள்ளன. நேற்று ஒரே நாளில் 8350 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதுடன் பெங்களூரில் 85, மைசூரில் 12 , தக்ஷிணாகன்னடா மாவட்டத்தில் 8 , சாமராஜநகரில் 7, விஜயநகரில் 6, பெங்களூர் கிராமதாரம் , மண்டிய மற்றும் ராம்நகரில் தலா 5 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதே போல் பெல்லாரி மற்றும் சிவமொக்காவில் தலா நான்கு , சிக்கமகளூரு மற்றும் கோளாறில் தலா 3 , சிக்கபள்ளாபூர் , தார்வாட் , கதக் மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பீதர் கொப்பலா , மற்றும் கலபுரகியில் தலா ஒருவர் என மொத்தம் 158 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 568 பேரில் 514 பேர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 54 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேர் அவசர சிகிச்சை பிரிவிலும் 40 பேர் சாமான்ய படுக்கைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.