கொரோனா பாதித்து உயிரிழந்த நபரின் உடல் அடக்கம்


திருப்பூர்,மே.4-
கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த நபர் ஒருவரின் உடலை தமுமுக வை சார்ந்தவர்கள் அடக்கம் செய்து அரும்பணி ஆற்றியுள்ளனர்.
திருப்பூர் குமரன் சாலை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , திருப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று உயிரிழந்தார். அவரின் குடும்பத்தார்கள் , உடலை அடக்கம் செய்து தருமாறு திருப்பூர் வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் நோன்பு வைத்த நிலையிலும் தமுமுக வினர் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை பெற்று அடக்கம் செய்தனர்.தமுமுக மற்றும் அதன் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சியினர் இதுபோன்ற மனிதாபிமான உன்னத பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.