கொரோனா பாதிப்பு 15,528 ஆக குறைந்தது

புதுடெல்லி, ஜூலை 19
இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. இந்த சூழலில், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதன்படி நேற்று 16 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று புதிதாக 15,528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 ஆயிரத்து 528 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,37,83,062 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,785 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 16,113 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,13,623 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,43,654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,68,350 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 87,01,55,452 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.