கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்: முதல்வர்

பெங்களூர்: ஜூலை. 27 – பி ஜே பி இளைய பிரமுகர் பிரவீன் நெட்டாரு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறிஉள்ளார். மாநிலத்தில் ஒரு அப்பாவி ஒருவர் கொலை செய்யப்படும் போது ஆக்ரோஷங்கள் வெளிப்படுத்துவது சகஜம் . இந்த நிலையில் கேரளா எல்லையை தாண்டி கொலையாளிகளை பிடிக்க மாநில உள்துறை அமைச்சர் மற்றும் போலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளேன்என முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடையின் கதவை அடைக்கும் நேரத்தில் அக்கம் பக்கம் யாரும் இல்லாத நேரத்தில் இந்த கொலை நடந்துள்ளது. கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளுவோம். இது ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி . மக்களுக்கு ஆத்திரம் உள்ளது . ஆனாலும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக யாரும் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்த வில்லை. இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது என்ற ஆத்திரம் மக்களுக்கு உள்ளது.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார். இதே வேளையில் மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா செய்தியாளர்களிடம் கூறுகையில் .கொள்கை ரீதியில் விஷயங்களை தாக்கல் செய்யட்டும் ஆனால் கொலை செய்வது , ரத்தம் சிந்துவது சரியல்ல . இத்தகைய சக்திகளை மட்டம் தட்டுவேன். என தெரிவித்தார். பிரவீன் நட்டாரு கொலை விஷயமாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். ஒரு அப்பாவி இளைஞன் தன் கடையை மூடிக்கொண்டு வீட்டுக்கு செல்லும் போது கொலை செய்யப்பட்டுள்ளான. மோட்டார் சைக்கிளில் வந்த குற்றவாளிகள் கொலை செய்துள்ளனர். பிரவீன் கேரளா எல்லையில் இருந்துள்ளான். இதனால் கேரள அரசுடனும் நம் போலீசார் பேசி வருகின்றனர் . அங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது. ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்களும் ஆத்திரத்துடன் உள்ளனர். நானும் முதல்வரும் நேற்று இரவே போலீசாரிடம் பேசி உள்ளோம். தேவையான ஆலோசனைகள் வழங்கியுள்ளோம். இப்போது போலீசார் கொலையாளிகளை மிக தீவிரமாக தேடி வருகின்றனர்.நம் ஏ டி ஜி பி கேரளாவிற்கு சென்றுள்ளார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஹிஜாப் விவகாரத்தின் பின்னனியில் இருந்த தீய சக்திகளே இந்த சம்பவத்திற்கு பின்னரும் உள்ளனர். கொள்கை ரீதியில் வாதங்களை வைக்கட்டும் ஆனால் கொலை செய்வது , ரத்தம் சிந்துவது சரியல்ல இத்தகைய சக்திகளை மட்டம் தட்டுவேன் . போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம் நடந்த கொலை விவகார குற்றவாளிகள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அதுவும் இந்த கொலைக்கு காரணமா என்றும் போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள் . இவ்வாறு மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.