கொல்லப்பட்ட பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை

பெங்களூர் : ஜனவரி. 25 – எசவந்தபுர ரயில் நிலையத்தின் நடை பாதையில் நீல நிற ட்ரம்மில் ரத்த சோகையுடன் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ண உடல் குறித்து அடையாளம் கண்டு இந்த கொலையை செய்தவர்களை கண்டுபிடிப்பது போலீசாருக்கு மிக பெரிய சவாலாக உள்ளது . இதுவரை அந்த பெண்ணின் விஷயமாக அவருடைய குடும்பத்தாரோ , அல்லது உறவினர்களோ யாரும் தொடர்பு கொள்ளாதது போலீசாருக்கு மிகவும் சங்கடமாகியுள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்று விசாரணைகள் மேற்கொண்டுள்ள ரயில்வே போலீசாருக்கு முதலில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதைவிட கொலையுண்டவரின் அடையாளம் தெரிய வேண்டியுள்ளது. தொடர்ந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொண்டும் எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் லுக் அவுட் நோட்டீசை பிறப்பித்து தெலுங்கு மற்றும் அங்கிளை மொழிகளில் இந்த பெண்ணின் விவரம் குறித்து தெரிவிக்குமாறு போலீசார் அறிவித்துள்ளார். பிளாஸ்ட்டிக் ட்ரம்மில் கிடைத்துள்ள இந்த உடலை குற்றவாளிகள் விசாகபட்டினத்திலிருந்து நகருக்கு வரும் ரயிலில் எடுத்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை வைத்து விசாகபட்டினத்திலிருந்து யஷ்வந்த்பூருக்கு வரும் ரயில்வே போலீஸ் நிலையங்கள் அனைத்திலும் காணாமல் போன பெண் குறித்த புகார் விவரங்களை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாகப்பட்டினம் முதல் எசவந்தபுரம் ரயில் நிலையம் வரையிலான அனைத்துபோலீஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் காணாமல் போன் பெண் குறித்த புகார்கள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.