கொள்ளையடித்த 2 பேர் கைது

தானே, ஆகஸ்ட். 10 – கல்யாண் பகுதியில் வீடு புகுந்து நகை, பணம் திருடப்படும் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்த புகாரின் படி மான்பாடா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவின் மூலம் நடத்திய ஆய்வில் 2 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் யூசுப் சேக் மற்றும் நவ்சாத் ஆலம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் யூசுப் சேக் மீது 23 வழக்குகளும், நவுசாத் மீது 11 வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
இவர்கள் மான்பாடா, ராபாலே, பன்வெல், காமோட்டே, தலோஜா உள்பட 18 இடங்களில் கைவரிசை காட்டி வந்து உள்ளனர்.
இவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், வாகனம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.