கொள்ளை கும்பல் கைது

தக்ஷிண கன்னடா : ஜூன். 20 – மின்னல் வேகத்தில் நடவடிக்கை மேற்கொண்ட புத்தூர் பிரிவு வன துறை ஊழியர் ஆறு பலே கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.
சசிகுமார் , சதீஷ் , விக்னேஷ் , வினித் , சம்பத்குமார் மற்றும் ரத்தீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள். இவர்கள் ஆறுபேரும் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். புத்தூர் அருகில் மானி –
மைசூர் தேசிய நெடுஞசாலையில் இவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி யானை தந்தம் மற்றும் இவர்களின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நீதிமன்றம் இவர்களுக்கு நீதிமன்ற கைது உத்தரவிட்டு ள்ளது .
துணை வன பாதுகாப்பு அதிகாரி வொய் கே தினேஷ் குமார், மற்றும் உதவி வன பாதுகாப்பு அதிகாரி பி கார்யபா ஆகியோரின் வழிக்காட்டுதலின்படி அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.