
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா அருகே ராஜம்பேட்டையில் தனியார் ஏடிஎம் மையம் உள்ளது. காஞ்சிபுரம் – வாலாஜா சாலையில் இந்த் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ஏடிஎம் மையத்தில் இன்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் கடப்பாறை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கடப்பாறை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் உடைத்துக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக போலீசாரின் ரோந்து வாகனம் சைரன் ஒலி எழுப்பிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. போலீசார் வாகனம் வருவதை அறிந்த கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோட்டினர். ரோந்து பணியின் போது ஏடிஎம் மையம் அருகே போலீசார் வந்தபோது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.