கோகைன் விற்ற நைஜீரிய ஆசாமி கைது

பெங்களூர்: மே. 31 – வியாபாரி விசாவில் இந்தியாவிற்கு வந்து போதைப்பொருள்களை விநியோகிப்பதில் ஈடுபட்டுவந்த நைஜீரியாவை சேர்ந்த போதை பொருள்கள் வியாபாரி ஒருவனை சி சி பி போலீசார் கைது செய்துள்ளனர். நைஜீரியா நாட்டை சேர்ந்த ஓகூய் என்பவன் கைது செய்யப்பட்ட குற்றவாளி . இவனிடம் போலீசார் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர் என டி சி பி எஸ் டி ஷரணப்பா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட குற்றவாளியிடமிருந்து எட்டு லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள அறுபது கிராம் எம்டிஎம்ஏ , ஆறு கிராம் கோக்கைன் , மற்றும் மொபைல் போன் கைப்பற்றப்பட்டுள்ளது . இது குறித்து பானசவாடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் வியாபாரி விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ள குற்றவாளி மும்பையை சேர்ந்த தனக்கு அறிமுகமான ஆப்ரிக்காவை சேர்ந்த ஒருவரிடமிருந்து போதை பொருள்களை வாங்கி நகருக்கு கொண்டு வந்து ஒரு கிராம் எம் டி எம் எவை எட்டு முதல் பத்தாயிரம் ரூபாய் வரை மற்றும் ஒரு கிராம் கோகைனை பத்து முதல் பன்னிரண்டாயிரம் ரூபாய்கள் வரை விற்று வந்துள்ளான். தனக்கு அறிமுகமுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்று பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டுவந்துள்ளான். இவன் நகரின் ஹென்னூர் பகுதியில் போதைப்பொருள்களை விற்று வந்துள்ளான். நம்பகமான தகவலின்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் இவனை கைது செய்துள்ளதாகவும் டி சி பி டாக்டர் ஷரணப்பா தெரிவித்தார்.