கோடநாடு கொலை – குஜராத் தடயவியல் ஆய்வு குழு வருகை

சென்னை: பிப்ரவரி 2- கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக குழு தமிழகம் வந்துள்ளது. திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு முதல் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில், கடந்த 2017ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான் உள்பட 10 பேர் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.