கோதுமை உற்பத்தி 11.2 கோடி டன் எட்டும்

புதுடெல்லி: மார்ச்.2- நடப்பு பயிர் ஆண்டில் கோதுமை உற்பத்தி இதுவரை இல்லாத அளவில் 11.2 கோடி டன்னை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஜூலை முதல் 2024 ஜூன் வரையிலான நடப்பு பயிர் ஆண்டில் முக்கிய வேளாண் பயிர்களின் உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய வேளாண் அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
அதன்படி, கோதுமை உற்பத்தி முந்தைய பயிர் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு பயிர் ஆண்டில் 1.32 சதவீதம் அதிகரித்து 11.2 கோடி டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2022-23 நிதி ஆண்டில் கோதுமை உற்பத்தி 11.05 கோடி டன்னாகவும், 2021-22 பயிர் ஆண்டில் 10.77 கோடி டன்னாகவும் இருந்தது.