கோப்பையை வெல்வது யார்? பாகிஸ்தான் இலங்கை நாளை பலப்பரீட்சை

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கியது. 20 ஓவரில் நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது. இதில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. நேற்றுடன் ‘சூப்பர் 4’ சுற்று முடிந்தது. இலங்கை தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா (ஒரு வெற்றி 2 தோல்வி), ஆப்கானிஸ்தான் (3 ோல்வி) அணிகள் வெியேற்றப்பட்டன. ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஜகமது ரிஸ்வான், பஹர் ஓமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளார். பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ்ரவுப், ஷதப்கான் ஆகியோர் உள்ளனர்.