கோயிலில்ஆடை கட்டுப்பாடு

தஞ்சாவூர்: டிச.1- தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில், கோயிலில் ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்புப் பலகை நேற்று முன்தினம் முதல் வைக்கப்பட்டு உள்ளது.
அதில், ஆண்கள் வேஷ்டி, பேன்ட், சட்டை, பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் போன்றவற்றை மட்டுமே அணிந்து கோயிலுக்குள் வரலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அரைக்கால் டவுசர், லெக்கின்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கோயில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.