கோரிக்கைகளை வலியுறுத்திவிவசாயிகள் சார்பில் பாரத் பந்த்

புதுடெல்லி: பி ப். 16: விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இன்று பாரத் பந்த்தில் பங்கேற்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா உட்பட பல விவசாயிகள் சங்கங்களும், மத்திய தொழிற் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதலுக்கான உத்திரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘தி சம்யுக்தா கிசான்மோர்சா, தி கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 37 விவசாயிகள் சங்கங்தினர் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் பேரணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
டிராக்டர் மற்றும் டிராலிகளில் 6 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்களுடன் இவர்கள் புறப்பட்டனர். இவர்களை டெல்லி நகருக்குள் நுழைய விடாமல் தடுக்க ஹரியாணா எல்லையில் பாதுகாப்பு படையினர் தடுப்புகள் மற்றும் முள் வேலிகளை அமைத்தனர்.இதனால் பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் ஒன்று திரண்டனர். ட்ரோன்மூலம் கண்ணீர் புகை குண்டுகளைவீசியும், தடியடி நடத்தியும் விவசாயிகளை கலைக்க ஹரியாணா போலீஸார் முயன்றனர். ஆனால் பலன் இல்லை. போலீஸாரின் இந்த செயலுக்கு விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.
இதனால் போக்குவரத்து, வேளாண் நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்திரவாத திட்ட பணிகள் இன்று பாதிக்கப்படலாம், தனியார் அலுவலகங்கள், கடைகள், ஊரக தொழில் சாலைகள், சேவைநிறுவனங்கள் ஆகியவை இன்று மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசியப் சேவைகளில் பாதிப்பு இருக்காது.30,000 கண்ணீர் புகை குண்டுகள்: போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீஸாரிடம் ஏற்கனவே அதிகளவிலான கண்ணீர் புகை குண்டுகள் இருப்பில் உள்ளன. இந்நிலையில் மத்தியப் பிரதேசம் குவாலியரில் உள்ள எல்லை பாதுகாப்பு படைப் பிரிவிடம் இருந்து மேலும் 30,000 கண்ணீர் புகை குண்டுகளை வாங்க டெல்லி போலீஸார் வாங்க உள்ளனர்.மாணவர்களுக்கு அறிவுறுத்தல்: விவசாயிகள் போராட்டத்தால் தேசிய தலைநகர் மண்டலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.