கோர விபத்து: சுற்றுலா பயணிகள் 14 பேர் பலி20 பேர் படுகாயம்

குவாஹாட்டி:ஜன.3- அசாம் மாநிலத்தில் சுற்றுலா பேருந்து மீது லாரி மோதியதில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அசாம் மாநில டேர்கான் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து தொடர்பாக காவல்துறை தரப்பில், இன்று அதிகாலை 3 மணியளவில் சுற்றுலா பயணிகள் 45 பேருடன் பாலிஜானில் இருந்து அத்கேலியா நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அவர்கள் சேர வேண்டிய இடத்தை நெருங்கியிருந்த நேரத்தில் நிலக்கரி ஏற்றிவந்த லாரி ஒன்று பேருந்தில் மீது நேருக்கு நேர் மோதியது. லாரி மார்கரிட்டா பகுதியில் இருந்து வந்துள்ளது. லாரி மோதியதில் சுற்றுலா பேருந்தில் இருந்த 45 பேரில் 14 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.