கோர விபத்து – தந்தை மகள் பலி

பெங்களூர் செப்டம்பர் 13
பெங்களூர் காமாட்சி பாலையாவில் இன்று நடந்த கோர விபத்தில் தந்தை மகள் பரிதாபமாக பலியானார்கள்.பலியானவர் பெயர் ஏசு வயது 45 இவரது மகள் மரிய ஜெனிஃபர் வயது 20. மரிய ஜெனிஃபருக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக பெங்களூர் உயர்மலை மாவட்ட பேராலயத்தில் திருமண கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இயேசு ஆட்டோ டிரைவராக பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.

எனவே திருமண கவுன்சிலிங் ஆலோசனைக்காக இன்று தனது மகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இயேசு ஆட்டோ ஓட்டி சென்றார். அப்போது சும்னஹள்ளி பகுதியில் வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. தந்தை மகள் இருவரும் பலியானார்கள். திருமண ஏற்பாடு நடந்து வந்த நிலையில் திருமணம் முடியும் முன்பே மணப்பெண் மரணம் அடைந்து விட்டார் அவரது தந்தையும் உயிர் பிரிந்தது. இந்த விபத்து நடத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்