கோர விபத்து 13 பேர் சாவு

பெங்களூரு,அக்.25-
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நின்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது டாட்டா சுமோ மோதியதில் இந்த கோர சம்பவம் நடந்தது. காலையில் அதிகமான பனிமூட்டம் இருந்த காரணத்தினால் எதிரே நின்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி கண்ணுக்கு தெரியாமல் அதன் மீது டாட்டா சுமோ மோதியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் சொந்த ஊரில் நடந்த தசரா பண்டிகை விழாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பியபோது இந்த கோதை விபத்து நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கோரண்ட்லாவில் இருந்து 3வயது குழந்தை, 4 பெண்கள் என மொத்தம் 14 பேர் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சிக்கபள்ளபூர் மாவட்டம் பாகெப்பள்ளிபகுதியில் அதிக பனி மூட்டம் நிலவியது. முன்னால் செல்ல வகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டல் நிலவியது.
அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த ரெடிமிக்ஸ் காண்கிரீட் லாரி, டாடா சுமோ ஒட்டுனருக்கு தெரியாததால் அதிவேகமாக வந்த டாடா சுமோ கார் லாரியின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 6 பேர் உயிரிழ்ந்தனர்.தசரா விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு பெங்களூரு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிக்கபள்ளபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகேஸ் தலைமையில் ஏராளமான போலிசார் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிக்கபள்ளாபுராவின் தேசிய நெடுஞசாலை 44ன் சித்ராவதி அருகில் அதிகாலை 6.30 மணியளவில் ஆந்திராவின் பதிவு எண் கொண்ட டாட்டா சுமோ வாகனம் சாலை ஓரத்தில் நின்றிருந்த டேங்கர் மீது மோதியதில் குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படு காயமடைந்த இரண்டு பேர் சிக்கபள்ளாபுரா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதுடன் அவர்களின் நிலையும் கவலைக்கிடமாயுள்ளது . இறந்தவர்கள் அனைவரும் ஆந்திராவின் கோரண்டலா பகுதியை சேர்ந்தவர்கள். . இவர்கள் ஹன்கசந்திராவில் வசித்து வந்தனர். தசரா பண்டிகைக்கு தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்ற இவர்கள் பண்டிகையை முடித்து கொண்டு நகருக்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அருணா , நவீன் குமார் நஞ்சுண்டப்பா , பத்மாவதி , ருத்திக் குமார் , ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள். மற்றும் வேறு சிலரின் பெயர் மற்றும் அடையாளம் தெரிய வரவில்லை. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் , 10 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை இறந்துள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். மோதலின் விளைவால் காரின் கதவுகள் அப்பளம் போல் நொறுங்கியுள்ளன . உள்ளொர்வாசிகள் மற்றும் போலீசார் வாகனத்தில் உள்ளோரை வெளியேற்ற கார் கதவுகளை உடைக்க வேண்டியதாயிற்று. பயணிகள் ஆந்திராவிலிருந்து நகருக்கு வரும் போது சித்ராவதி அருகில் சிமெண்ட் லாரி மீது பின் பக்கமாகமோதியுள்ளது . பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.