கோர விபத்து 2 பேர் சாவு 13 பேர் காயம்

குனிகள் : ஜூன். 4 – வேகமாக ஓட்டி வந்த இன்னோவா கார் ஒன்று சாலை தடுப்பு மீது முதலில் மோதி பின்னர் டெம்போ ட்ராவெலர் மீது மோதியதில் இரண்டு பேர் அதே இடத்தில் இறந்திருப்பதுடன் 13 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பட்டணத்தின் புறப்பகுதியில் தேசிய நெடுஞசாலை 75ல் பேகூறு அருகில் நடந்துள்ளது. காரின் ஓட்டுநர் சுனிலா (28) மற்றும் பெயர் தெரியாத மற்றொருவர் அதே இடத்தில் இறந்துள்ளனர். காரில் பயணித்த மூன்று பேர் மற்றும் டெம்போவில் பயணம் செய்தவர்களில் 13 பேர் படு காயங்களடைந்துள்ளனர் . காரில் இருந்த மூன்று பேர் தீவிர காயமடைந்துள்ள நிலையில் இவர்கள் மூவரும் கூடுதல் சிகிச்சைக்காக பெங்களூரின் நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் . டெம்போ ட்ரேவலரில் இருந்த காயமடைந்தோர் குனிகள் பட்டணத்தின் அரசு மருத்துவமனை மற்றும் ஆதி சஞ்சனகிரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பெங்களூரிலிருந்து ஹாசன் மார்கமாக சென்றுகொண்டிருந்த இன்னோவா கார் வழியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பட்டணத்தின் புற பகுதியில் தேசிய நெடுஞசாலை 75ன் பேகூர் பாலம் அருகில் சாலை தடுப்பில் மோதியுள்ளது. பின்னர் பக்கத்து சாலைக்கு நுழைந்து நாகமண்டலா மார்கமாக பெங்களூரை நோக்கி சென்றுகொண்டிருந்த டெம்போ டிராவெல்லர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த இரண்டு வாகனங்களின் மோதலுக்கு இடையில் ஒரு புல்லெட் இரு சக்கர வாகனமும் சிக்கி கொண்டதில் பைக்கை ஒட்டி வந்தவர் கார் மோதிய வேகத்தில் பைக்கிலிருந்து கீழே விழுந்துள்ளார். அவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த குனிகள் போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துகொண்டுள்ள குனிகள் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு டி வொய் எஸ் பி ரமேஷ் , சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருப்ரசாத் நேரில் வந்து மேற்பார்வை இட்டனர்.