கோர விபத்து 3 பேர் சாவு

சிவமொக்கா : நவம்பர். 7 – கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்துள்ள சம்பவம் ஷிராலகொப்பா அருகில் மஞ்சிகொப்பாவில் நேற்று இரவு நடந்துள்ளது. ஹலுகினகொப்பாவை சேர்ந்த ஜோதி (30) , கங்கம்மா (50) மற்றும் சௌஜன்யா (4 ) ஆகியோர் இந்த விபத்திலுயிரிழந்தவர்கள். மேலும் மற்றொருவருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டு அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மல்லிகார்ஜுனா , மகள் சௌஜன்யா , மனைவி ஜோதி மற்றும் தாய் கங்கம்மா ஆகியோர் ஒரே வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
இவர்கள் ஷிராலகொப்பாவிலிருந்து ஹலுகினகொப்பாவில் உள்ள வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். கார் ஹிரேகரூரு மார்க்கத்திலிருந்து ஷிராலகொப்பாவிற்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது மஞ்சேகொப்பா அருகில் கார் மற்றும் பைக் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன . இந்த விபத்தில் குழந்தை சௌஜன்யா அதே இடத்தில் இருந்ததுடன் மல்லிகார்ஜுனா , ஜோதி மற்றும் கங்கம்மா படு காயமடைந்து ஷிகாரிபுரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் . அதே மருத்துவமனையில் கங்கம்மா இறந்துள்ளார். கூடுதல் சிகிச்சைக்காக சிவமொக்காவிற்கு எடுத்து செல்லும் வேளையில் மல்லிகார்ஜுனாவின் நிலைமையும் மோசமடைந்து அவரும் இறந்துள்ளார்.
இந்த விபத்தில் சிக்கிய பைக் அப்பளம் போல் நசுங்கியுள்ளது . இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஷிராலகொப்பா போலீசார் விரைந்து வந்து மேற்பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.