கோர விபத்து – 4 மாணவர்கள் பரிதாப பலி

பாகல்கோட்டே : ஜனவரி. 29 – நண்பர்கள் கூட்ட நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சந்தோஷமாக வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் இருந்த பள்ளி பேரூந்து மீது ட்ராக்டர் மோதிய கொடூர விபத்தில் நான்கு மாணவர்கள் இறந்துள்ள சோக சம்பவம் ஜமகண்டி தாலூகாவின் அலகூறு அருகில் நடந்துள்ளது. ஸ்வேதா பாட்டில் (10) , கோவிந்த சதாசிவ ஜம்பகி (10) , பசவராஜ சதாசிவ கொடகி (15) மற்றும் சாகர குருலிங்க கடகோலா (16) ஆகியோர் இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்கள். தவிர பேரூந்தில் இருந்த எட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் ஜமகண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்திலேயே ஒரு மாணவன் உயிரிழந்திருப்பதுடன் மற்றவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். அலகூரிலிருந்து கவடகி கிராமத்திற்கு பேரூந்து வந்து கொண்டிருந்தது. இந்த கிராமத்தில் உள்ள வர்த்தமான மஹாவீரர் தனியார் பள்ளிக்கூடத்திர்ற்கு சொந்தமான இந்த பேரூந்து பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவை முடித்து கொண்டு மாணவர்களை வீடு சேர்க்க சென்றுகொண்டிருந்தது. அப்போது ட்ராக்டர் பின்னிருந்து வேகமாக வந்து பேரூந்து மீது மோதியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு பாகல்கோட்டே எஸ் பி அமர்நாத் ரெட்டி நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஜமகண்டி கிராமிய போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. இதே போல் சீமந்தத்திற்கு சென்றுகொண்டிருந்த டெம்போ வாகனம் கவிழ்ந்ததில் 19 பேர் படு காயங்களடைந்துள்ளனர்.தவிர ஓர் பெண் அதே இடத்தில உயிரிழந்துள்ளார். சிவமொக்கா மாவட்டத்தின் சிகாரிபுரத்திலிருந்து வரும்போது சென்னிகட்டே அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. சிவமொக்காவிலிருந்து சிகாரிபுரா தாலூகாவின் கொடமுக்கி என்ற கிராமத்திற்கு சீமந்த விழாவில் கலந்து கொள்ள சென்றுகொண்டிருந்த 20 பேர் பயணித்த டெம்போ வாகனம் உருண்டுள்ளது . காயமடைந்தவர்களுக்கு சிவமொக்காவின் மெக்கான் மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்க பட்டு வருகிறது.