கோர விபத்து 6 பேர் சாவு

சித்ரதுர்கா, ஜூன் 15: தேசிய நெடுஞ்சாலை 4-ல் பரமசாகர் ஹோப்ளி சிக்கபென்னூர் அருகே இன்று அதிகாலை கார் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 2 பெண்கள், குழந்தைகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரியும், காரும் சித்ரதுர்கா பகுதியில் இருந்து தாவணகெரே நோக்கி சென்று கொண்டிருந்தன. வேகமாக வந்த லாரி, காரின் பின்னால் இருந்து மோதி விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூரு தனிசந்திராவை சேர்ந்த பிரஜ்வல் ரெட்டி (30), ஹர்ஷிதா (28), மோகன் (2) மற்றொரு குழந்தை உள்பட‌ 4 பேர் உயிரிழந்தனர். மற்ற 5 பேர் பலத்த காயம் அடைந்து தாவணகெரேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் பெங்களூரில் இருந்து கோவாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​சிக்கபென்னூர் கிராமம் அருகே அதிகாலை காரின் பின்புறம் வேகமாக வந்த லாரி மோதியது.

தகவல் அறிந்ததும் பரமசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரில் இருந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, லாரி, கார் மீது மோதியதில் காரின் பின்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. அப்போது, ​​பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன் மற்றும் நடு இருக்கைகளில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
2 மாணவர்கள் உயிரிழந்தனர்
இதனிடையே, பிட‌தியில் நடந்த சாலை விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். பெங்களூரு – மைசூரு தாபஸ்பேட்டை நெடுஞ்சாலையின் புறநகர் பகுதியான கப்பநாயனதொட்டி அருகே நேற்றிரவு வேகமாக வந்த காரும், லாரியும் மோதிக்கொண்டதில் பொறியியல் மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வித்யாரண்யபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விஷ்வா (21), சூர்யா (21) ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த கார் டிரைவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஆந்திராவை சேர்ந்த மாணவர்கள் வகுப்புத் தோழர்கள், அவர்கள் வேலைக்காக மைசூரு சென்றுவிட்டு பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில், கார் நொறுங்கி, லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த ராம்நகர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.