கோர விபத்து 7 பேர் சாவு

பெங்களூர் செப்.4-
இரு வேறு இடங்களில் நடந்த துயர சம்பவங்களில் 7 பேர் பலியானார்கள். சித்ர துர்காவில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். கன்னியாகுமரி கடலில் குளித்த போது பெங்களூரை சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். இந்த துயர சம்பவங்கள் குறித்த விபரம் வருமாறு. சித்ரதுர்காவில்
நெடுஞசாலையின் ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒரே குடுமபத்தை சேர்ந்த நான்கு பேர் இறந்துள்ள சோக சம்பவம் இம்மாவட்டத்தின் மல்லபுரா அருகில் நடந்துள்ளது. நெடுஞசாலையில் நின்றிருந்த லாரி மீது வேகமாகமாக வந்த கார் மோதியதில் காரில் இருந்த நான்கு பேர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.தவிர மேலும் மூன்று குழந்தைகள் பலத்த காயங்கலடைந்து மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் இருந்த குடும்பம் ஹோஸ்பேட்டே விலிருந்து தும்கூறுக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் காரில் பயணித்த சம்சுதீன் (400 , மல்லிகா (37) , கலீல் (42) மற்றும் தபிரீஸ் (13) ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். தவிர குழந்தைகள் நர்கீஸ் , ரோஹன் மற்றும் ரஹமான் ஆகியோர் படு காயங்கலடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சாலியின் ஓரத்தில் லாரி நின்றிருப்பதை கவனிக்காமல் அதிவேகமாக வந்த நிலையில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியுள்ளதில் இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு எஸ் பி தர்மேந்திரா குமார் மீனா நேரில் வந்து ஆய்வு நடத்தி இறந்த நான்கு பேரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் இது போன்ற விபத்துக்கள் நடப்பதாகவும் அதிகளவில் லாரி pondr போன்ற பெரிய வாகனங்கள் கேட்டு போய் ஓரத்தில் நிறுத்திவைக்கப்படுவதாகவும் இதனால் பல விபத்துக்கள் நடப்பதாகவும் அருகில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர் . இதே போல் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஹோலால்கெரே அருகில் காஸ் லாரி மற்றும் ஆம்னி வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆம்னி வாகன ஓட்டுநர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இறந்து போனவர் சித்ரதுர்காவின் தமட்டுக்கல்லு பகுதியில் வசித்துவந்தவர் என தெரிய வந்துள்ளது. ராமகிரியில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வரும்போது இந்த விபத்து நடந்துள்ளது. இதேபோல் வார இறுதி சுற்றுலாவாக கன்னியாகுமரிக்கு வந்திருந்த பெங்களூரை சேர்ந்த மூன்று பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.இந்த விபத்தில் நீரில் மூழ்கிஉயிரிழந்தவர்கள் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த மணி (30 ) மற்றும் சுரேஷ் (30) என தெரியவந்துள்ளது.. இதே நேரத்தில் நீரில் மூழ்கிய மற்றொரு பெண் பிந்து என்பவராய் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீட்டுள்ளனர். தற்போது மிகவும் தீவிர நிலையில் உள்ள பிந்துவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் பெங்களூரின் தனியார் நிறுவன ஊழியர்களாக 10 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துஓட்டல் ஒன்றில் அனைவரும் தங்கி இருந்ததுடன் நேற்று இங்குள்ள கோவளம் கடற்கரையை பார்க்க வந்துள்ளனர். அனைவருமே கடலில் இறங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது மணி சுரேஷ் மற்றும் பிந்து மூன்று பேரும் கடலின் ஆழ பகுதிக்கு சென்றுள்ளனர்.. அப்போது வந்த பெரிய அலையில் இவர்கள் மூவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது உடனிருந்தவர்கள் இவர்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர்.உடனே விழிப்படைந்த கடலோர காவலாளிகள் எவ்வளவோ முயற்சித்தும் அதற்குள்ளாக சுரேஷும் மணியும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். பிந்துவை மீட்ட போலீசார் உடனே அவரை கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு சென்று சேர்த்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கன்யாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.