கோவையில் திமுக முப்பெரும் விழா தொண்டர்கள் குவிந்தனர்

கோவை: ஜூன் 15: கோவையில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெறவுள்ள நிலையில், அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை உரையாற்றவுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
தமிழகம் மற்றும் புதுவையில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் 40 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா ஜூன் 14ஆம் தேதி கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வந்த நிலையில் சில காரணங்கள் காரணமாக முப்பெரும் விழா தேதி மற்றும் இடம் ஆனது மாற்றப்பட்டது. அதாவது முதலில் ஜூன் நான்காம் தேதி கோவை செட்டிபாளையம் பகுதியில் திமுக முப்பெரும் விழா நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 15ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டது.