
லக்னோ: நவ. 9 உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களை எடுத்து செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், தனது சகோதரியின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து இளைஞர் ஒருவர் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியில் இளம்பெண் ஒருவர் வீட்டில் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் போட்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கிறது.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்திருக்கிறார். இதை பார்த்து ஷாக்கான இப்பெண்ணின் தம்பி, அக்காவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். கு.க செல்வம் விடுங்க.. “திமிங்கலம்” மாட்ட போகுது.. பாஜகவில் இதென்ன புதுஸா.. காத்திருக்கும் “கண்கள்” இதை நம்பாத சகோதரன் தனது அக்காவை அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்கையில் ஆம்புலன்ஸை கேட்டிருக்கிறார். ஆனால் அந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இருக்கவில்லை. எனவே அக்காவை பைக்கில் வைத்தே மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.