சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த தேவேகௌடா

புதுடெல்லி : ஜூலை. 18 – முன்னாள் பிரதமர் மற்றும் ம ஜ தா கட்சி தேசிய தலைவரான ஹெச் டி தேவேகௌடா சக்கர வண்டியில் வந்து ஜனாதிபதி தேர்தலில் இன்று வாக்களித்தார். இதுவே முதல் முறையாக தேவேகௌடா பொது மக்களுக்கிடையில் சக்கர வண்டியில் வந்து வாக்களித்துள்ளார். கால் வலி இருப்பதனால் தேவேகௌடா சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துள்ளனர். திரௌபதி முர்மு நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வான அடுத்தநாளே தொலைபேசியில் தொடர்பு கொண்டு திரௌபதி முர்மு தேவேகௌடாவின் ஆதரவை கோரியுள்ளார். தவிர திரௌபதி முர்மு சம்பத்தில் பெங்களூருக்கு வந்த போதும் தேவேகௌடா மற்றும் குமாரசாமியை சந்தித்து தனக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முக்கு கட்சி அரசியலை மீறி ஆதரவு தெரிவிப்பதாக ம ஜ தா ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. இதே போல் மற்றொரு முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்கும் சக்கர நாற்காலியில் வந்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.