சக்தி திட்டம்: 100 நாட்களில்62 கோடி மகளிர் பயணம்

பெங்களூரு, செப். 22– சக்தி திட்டத்தில் 100 நாட்களில் 62 கோடி மகளிர் இலவசமாக அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். மாநில அரசின் லட்சியமான ‘சக்தி திட்டம்’ 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், ஏறக்குறைய 62 கோடி பெண்கள் போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
ஜூன் 11 முதல் செப்டம்பர் 18 வரை, கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC), பெங்களூர் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC), வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் கல்யாண் கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்த பெண் பயணிகளின் மொத்த டிக்கெட் மதிப்பு ரூ. 11,442 கோடியாக உள்ளது. ஜூன் மாதத்தில் 10.54 கோடி பெண் பயணிகளிடமிருந்து 248 கோடியும், ஜூலையில் 19.63 கோடி பெண் பயணிகளிடமிருந்து ரூ.453 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.20.03 கோடி பெண் பயணிகளிடமிருந்து ரூ.459 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் ஹாவேரி பிரிவு சக்தி திட்டத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.55 லட்சம் பெற்றுள்ளது, அதே நேரத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு சராசரி வருமானம் 173 லட்சமாக உள்ளது.
போதிய போக்குவரத்திற்காக, 13 மாநிலங்களுக்கு இடையேயான,
24 விரைவு பஸ்கள் சீரமைக்கப்பட்டு, பயணிகளின் தேவைக்கேற்ப, 172 வரிசைகள் திருத்தப்பட்டு, வசதி செய்யப்பட்டுள்ளன என்று ஹாவேரி கோட்ட கோட்ட கட்டுப்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.