சங்கரய்யாவுக்கு மணிமண்டபம்

தாம்பரம்:நவ. 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்தசங்கரய்யாவின், குரோம்பேட்டை இல்லத்துக்கு நேரில் சென்ற மத்திய மீன்வளத் துறைஇணை அமைச்சர் எல்.முருகன், அவரது படத்துக்கு மலர் தூவிமரியாதை செலுத்தினார்.
அவருடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர்வேதசுப்பிரமணியம் ஆகியோர் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர், செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன்கூறியதாவது: மறைந்த சங்கரய்யா தமிழகத்தில் மிக மூத்த அரசியல் தலைவர். சுதந்திரத்துக்காக பாடுபட்டவர். தனதுஇறுதி மூச்சு வரை, தான் கொண்ட கம்யூனிஸ்ட் கொள்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

அனைத்து தரப்பு மக்களும் மிகப்பெரிய மதிப்பை வைத்திருக்கும் பழம்பெறும் அரசியல் தலைவராக இருந்தார். அவருடைய சமூக பங்களிப்பு அளப்பறியது. சட்டப்பேரவை உறுப்பினராக 3 முறை இருந்த போது, தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு தருணங்களில் குரல் கொடுத்தவர்.