சங்கலி தொடர் விபத்து 48 வாகனங்கள் சேதம் : 30 பேர் காயம்

புனே (மஹாராஷ்டிரா )
நவம்பர். 21 – மும்பை – பெங்களூர் தேசிய நெடுஞசாலையில் உள்ள நவலே மேம்பாலத்தில் நேற்று இரவு நடந்த சங்கலி தொடர் விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதமடைந்திருப்பதுடன் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். புனேவை நோக்கி நேற்று இரவு 9 மணியளவில் சென்று
கொண்டிருந்த வாகனத்தின் பிரேக் பழுதானதில் இந்த தொடர் விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதுடன் அதிர்ஷ்டவசமாக இந்த தொடர் விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு பிரிவுகள் மற்றும் புனே நகர அபிவிருத்தி ஆணையத்தின் பாதுகாப்பு குழுக்களும் வந்து நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. மும்பை – பெங்களூர் நெடுஞசாலையில் நடந்த இந்த சங்கலி தொடர் விபத்துக்களால் மும்பைக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமங்கள் பட்டுவந்த நிலையில் நள்ளிரவுக்கு மேல் போலீசார் பாதிப்புகளுக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்திற்கு வழிவகை செய்து கொடுத்துள்ளனர்.