சங்கிலிதொடர் விபத்து : வாகனங்கள் சேதம் : ஆட்டோ ஓட்டுநர் படுகாயம்

Byataranapura traffic policestation limits chain accident

பெங்களூர்: ஜூன். 13 – மைசூர் வீதியின் சாட்டிலைட் பஸ் நிலையம் அருகில் இன்று காலை நடந்த சங்கிலித்தொடர் சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். டெம்போ , ஆட்டோ , பி எம் டி சி பஸ் ஆகியவை ஒன்றன் பின் ஒன்று மோதிகொண்டத்தில் ஒரு ஆட்டோ இந்த விபத்தில் நசுங்கியதில் அதில் சிக்கிக்கொண்ட ஓட்டுனரை அரைமணி நேரத்திற்கும் மேல் போராடி அவரை அருகில் இருந்தவர்கள் வெளியே எடுத்துள்ளனர். பின்னர் ஓட்டுனரை தனியார் மருத்துவமணையில் சேர்த்துள்ளனர். ஓட்டுனருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதுடன் அவர் உயிராபத்திலிருந்து தப்பித்துள்ளார் என டி சி பி குலதீப் குமார் தெரிவித்தார். இந்த தொடர் விபத்தால் மைசூர் வீதியில் சில நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன நெரிசல்கள் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பைட்ராயணபுரா போக்குவரத்து போலீசார் பரிசீலனை நடத்தி வழக்கு பதிவு செய்திருப்பதுடன் உடனுக்குடன் வாகனங்களை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்திற்க்கு வசதி செய்து கொடுத்தனர்