சங்கிலி தொடர் விபத்து 3 பேர் சாவு

விஜயபுரா : செப்டம்பர் : – 1 – கே எஸ் ஆர் டி சி பஸ் மற்றும் இரண்டு கார்களுக்கிடையில் நடந்த தொடர் விபத்துக்களில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட மூன்று பேர் இறந்துள்ள சம்பவம் கொல்லாரா தாலூகாவின் தேசிய நெடுஞசாலை 218ன் குப்பகட்டி க்ராஸ் அருகில் நேற்று மாலை நடந்துள்ளது. கலபுரகி மாவட்டத்தின் சுனந்தா மல்லிகார்ஜுன கலஷெட்டி (25) சுமன் (2 மாத குழந்தை ) மற்றும் ஷரனம்மா பசவராஜ் கலஷெட்டி(55) ஆகியோர் இந்த விபத்தில் இறந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் இதே குடும்பத்தை சேர்ந்த உமேஷ் கலஷெட்டி, மற்றும் அவருடைய மனைவி சுரேகா கலஷெட்டி, மற்றும் குழந்தைகள் எட்டு மாத சுமன் , மற்றும் 2 வயதான சான்வி ஆகியோர் தீவிர காயமடைந்து இவர்கள் விஜயபுரா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாகல்கோட்டேவிலிருந்து விஜயபுராவுக்கு சென்றுஒண்டிருந்த கே எஸ் ஆர் டி சி பஸ் எதிரில் கலபுரகியிலிருந்து வந்து கொண்டிருந்த கலஷெட்டி குடும்பத்தார் பயணித்த கார் விஜயபுராவை சேர்ந்த கார் ஒன்றை ஓவர் டேக் செய்ய முயன்று இரண்டு கார்களும் பஸ் மீது மோதியுள்ளது. மற்றொரு கார் விஜயபுராவை சேர்ந்தது என்பதுடன் அதில் பயணித்தவர்களுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துக்கு பின்னர் விஜயபுராவை சேர்ந்த கார் ஓட்டுநர் வாகனத்தை விட்டு தப்பியோடியுள்ளான். கொல்லாரா போலீஸ் நிலையத்தில் இந்த கோர விபத்து பற்றி வழக்கு பதிவாகியுள்ளது.