சசிகலாவை நீக்கியது செல்லும்

சென்னை: டிச.5-அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த பிறகு, அவரது தோழியான வி.கே.சசிகலாவை இடைக்கால பொதுச் செயலாளராகவும், டிடிவி.தினகரனை துணை பொதுச் செயலாளராகவும் அதிமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தள்ளுபடி: அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளிக்க இருந்தது. இருப்பினும், நேற்று மழை காரணமாக நீதிமன்றம் செயல்படாத நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக சசிகலா மேல்முறையீட்டு மனுவைச் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.