சசிகலா உறவினர் கைது

சென்னை, ஜன.7-
செம்மரக் கடத்தல் வழக்கு தொடர்பாக இரவாரசியின் மகன் விவேக்கின் மாமனாரான பாஸ்கரிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அண்ணாநகரில் வசித்து வரும் சசிகலாவின் உறவினரான பாஸ்கர் நடத்தி வந்த அரைக்கலன்கள் கடையில் கடந்த ஆண்டு 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று அண்ணாநகரில் உள்ள பாஸ்கர் வீட்டிற்கு சென்ற மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவரை தியாகராய நகரில் உள்ள திரை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து நள்ளிரவில் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினரான பாஸ்கர் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். ஜாமீனில் உள்ள நிலையில் பாஸ்கரன் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் கடந்த ஆண்டு 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று அண்ணாநகரில் உள்ள பாஸ்கரன் வீட்டிற்கு சென்ற மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவரை தியாகராய நகரில் உள்ள திரை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து நள்ளிரவில் முதல் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஸ்கரனை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் சசிகலா குடும்ப வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது