சஞ்சய் ராவத் கைதுக்கு முன் கடைசி நிமிட பாச போராட்ட காட்சிகள்

புனே, ஆக. 1-
சிவசேனாவின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி.யான சஞ்சய் ராவத் சட்டவிரோத பணபரிமாற்றம் மற்றும் நிலமோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் அமலாக்க துறை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அவரது வீட்டுக்கு, நேற்று காலை 7 மணியளவில் 20 முதல் 22 அதிகாரிகள் வரை சென்று நடத்திய சோதனையில், ரூ.11.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை அமலாக்க துறை அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். எனினும், சஞ்சய் ராவத்தின் வழக்கறிஞர் விக்ராந்த் சப்னே கூறும்போது, சஞ்சய் ராவத் கைது செய்யப்படவோ அல்லது பிடித்து செல்லப்படவோ இல்லை. அமலாக்க துறை அலுவலகத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்யவே வந்துள்ளார் என கூறினார். இந்நிலையில், சஞ்சய் ராவத்திடம் அமலாக்க துறையின் விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. இதன் முடிவில், அவர் கைது செய்யப்பட்டார். சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டாலும், அவர் தலை வணங்கமாட்டார். ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என அவரது சகோதரர் சுனில் ராவத் கூறினார்.