சடலத்தை வீச 30 லட்சம் ரூபாய் கொடுத்த தர்ஷன்

பெங்களூரு, ஜூன் 12-
தும்கூரை சேர்ந்த ரேணுகா சாமி என்ற இளைஞரை படுகொலை செய்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ள கன்னட திரை உலகின் பிரபல நடிகர் தர்ஷன் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.ரேணுகா சாமியை தும்கூரில் இருந்து பெங்களூருக்கு வரவழைத்து தர்ஷனின் ஆட்கள் கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளனர்.பின்னர் ரேணுகா சாமி சடலத்தை அந்த இடத்திலிருந்து கொண்டு போய் மறைக்கவும்பிறகு தாங்கள்தான் கொலை செய்ததாக போலீஸ் நிலையம் சென்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கூறி அவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
பணம் பெற்ற மற்றொரு கும்பல், ரேணுகா சுவாமியின் சடலத்தை காமாட்சி பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட சுமனஹள்ளி கழிவறையில் வீசிவிட்டு சென்றுள்ளது.பின்னர் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்த கும்பல் போலீஸ் நிலையத்திற்கு வந்து, தாங்களே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.ஏன் இந்த கொலையை செய்தீர்கள் என்று இவர்களை தனித்தனியாக விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பல தகவல்களை கூறி உள்ளனர்.இரவோடு இரவாக
விசாரணை நடத்தியதில் தர்ஷன் கும்பல் செல்போன் மூலம் உரையாடியது தெரியவந்துள்ளது
பணம் பெற்றுக்கொண்டு இறந்த உடலை அப்புறப்படுத்தும் பொறுப்பில் இருந்த கும்பல், தர்ஷனின் உறவினருடன் தொடர்பில் இருந்தது.
தர்சனுடன் பிணத்தை அகற்றும் கும்பலும் போலீஸ் காவலில் உள்ளனர்.