சட்டசபையில் வெடித்த மோதல்

பெங்களூரு, பிப். 28: நேற்று ராஜ்யசபா தேர்தல் முடிவு வெளியானதையடுத்து, விதானசவுதாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என மர்மநபர் ஒருவர் கோஷம் எழுப்பியதால், சட்டப் மன்றத்தில் காங்கிரஸ் பாஜக‌ இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
இன்று சபை தொடங்கியதும் பாஜக உறுப்பினர்கள் பாரத் மாதாகி ஜெய் என்று முழக்கமிட்டனர். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் பேச எழுந்தப்போது, ​​சபாநாயகர் யு.டி. காதர், தேசியக் கொடியை அவமதிக்க வேண்டாம் என்று கூறியதால் ஆர். அசோக், ஆளுங்கட்சியை சுட்டிக்காட்டி, “தேசியக் கொடிக்கு பதிலாக, பாகிஸ்தான் கொடியுடன் வர வேண்டுமா?, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள் என்பதால், அவர்களை ஆதரிக்கிறீர்களா?” என்றார்.
அசோக்கின் பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்ததால், எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில், சபாநாயகர் யு.டி.காதர், குற்றச்சாட்டு-எதிர்க் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டிருந்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்தி, அசோக்கை பேச அனுமதித்தார். பின்னர் ஆர்.அசோக் பேச்சைத் தொடர்ந்தார். சட்டமன்ற‌ வரலாற்றில் நூற்றுக்கணக்கான அமர்வுகள் நடந்துள்ளன. விதானசவுதாவில் எப்படி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போடுவார்கள்?. எங்காவது தெருவில் நடந்திருந்தால் நாங்கள் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் விதானசவுதாவில் கோஷம் எழுப்பப்பட்டது ஜீரணிக்க முடியவில்லை. நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கும் விதான சவுதாவில். இப்படி நடநந்தால் நாட்டைக் காத்து நிற்கும் ராணுவ வீரர்களுக்கு என்ன பதில் சொல்வது.
“பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போட்டவர்களை சிவப்பு கம்பளத்தில் வரவழித்தது யார்? என்றார்.
பாஜக‌ துணைத்தலைவர் அரவிந்த் பெல்லாட் குறுக்கிட்டு, ஆளும் கட்சி உறுப்பினர்களை பார்த்து, “கோஷங்களை பாதுகாத்ததற்காக உங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும்” என்றார்.
அப்போது சபாநாயகர் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அவகாசம் தருவதாக கூறினார். ஆர். அசோக் தொடர்ந்து, மாநில மக்களின் காதில் பூ வைக்க பார்காதீர்கள். பாகிஸ்தான் என்று ஏன் கத்த வேண்டும். தாய்நாட்டின் தண்ணீர் சோறு, அதை உண்பவர் அப்படி கத்துகிறார். இதனை கண்டித்து கூச்சல் போட்டும் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சியில் இருந்து யாரும் இதனைக் கண்டித்து பேசவில்லை. இதை மூடி மறைத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்களுக்கு, பொறுப்பற்ற முறையில் ராஜ்யசபா சீட் வழங்கியுள்ளதாக ஆர்.அசோக் சாடினார்.
இந்த நிலையில், தினேஷ் குண்டுராவ் குறுக்கிட்டு ஏதோ பேச முற்பட்டபோது, ​​பாஜகவினர் அவருக்கு எதிராக திரும்பி, கோஷம் எழுப்பியவர்களை நீங்கள் அனுப்பிவைத்திருக்கலாம் என்றனர். இந்த நிலையில், சபையில் அமளி மேலும் வலுத்தது. அப்போது தலைவர் யு.டி. காதர் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்ததாக தெரிவித்தார்.

கடும் நடவடிக்கை: முதல்வர்
விதானசவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். துரோகிகளை ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.
நேற்று விதானசவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய விவகாரம் குறித்து பதிலளித்த அவர், முதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போடபட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகளை நாங்கள் ஏற்கனவே தடய அறிவியல் ஆய்வகத்திற்கு விசாரணைக்காக அனுப்பியுள்ளோம். முழக்கங்கள் உண்மையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம். கோஷம் எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். துரோகிகளை நிலை நிறுத்த வேண்டும் என்றார்.

ராஜ்யசபா தேர்தல் முடிவு கொண்டாட்டத்தின் போது, ​​யாரும் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பவில்லை. இது குறித்து நசீர் ஹுசைன் நேற்று தெளிவுபடுத்தியதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது தெரிவித்தார்.விதானசவுதாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை. ஆனால் அந்த ஆடியோ வீடியோவை விசாரணைக்காக எப்எஸ்எல்லிடம் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருவதாகவும், ஆதரவாக கோஷம் எழுப்பியது உண்மையானால், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.மேலும் ராஜ்யசபா தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது. அவர்கள் கலக்கமடைந்துள்ளனர். எனவே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் ஏன் பதவி விலக வேண்டும். பாகிஸ்தானுக்கு ஆதரவாக‌ கோஷங்கள் எழுப்பினால் அந்த நபரை தேச‌ துரோகி என்று சொல்வேன் என்று ஜமீர் அகமது கூறினார்.