சட்டசபை இன்றும் முடக்கம்

பெங்களூர்: செப்டம்பர். 23 – பி எம் எஸ் பொது கல்வி அறக்கட்டளையில் நடந்துள்ள அக்கிரமங்களில் உயர் கல்வி அமைச்சர் டாக்டர் சி எஸ் அஸ்வத்நாராயணா பங்கு பெற்றுள்ளார் என சட்டமன்றத்தில் குற்றஞ்சாட்டி , இது குறித்து விசாரனைக்கு வற்புறுத்தி ம ஜ தா அவையில் நேற்று முதல் துவங்கிய தர்ணாவை இன்றும் தொடர்ந்ததால் அவையில் குழப்பம் , கூச்சலான நிலைமை உருவாகி அவை சில நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று அவை கூடிய உடனேயே ம ஜ தா உறுப்பினர்கள் சபாநாயகர் எதிரில் வந்து நின்றுகொண்டு பி எம் எஸ் கல்வி அறக்கட்டளை அக்கிரமங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த அக்கிரமங்களில் பங்கு கொண்டுள்ள அமைச்சர் அஸ்வத்நாராயணா உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தி கோஷங்களை கூவ தொடங்கினர்.
ம ஜ த உறுப்பினர்களின் இந்த மறியலால் அவையில் கூச்சல் மற்றும் குழப்பமான சூழ்நிலை உருவானது.
இந்த கூச்சல் குழப்பத்துக்கிடையே பேசிய சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி நேற்று ஹெச் டி குமாரசாமி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசு பதில் அளித்துள்ளது.
விவரங்கள் தேவையெனில் கேளுங்கள். வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன் மறியலை கை விடுங்கள் என மறியலில் ஈடுபட்டுள்ள ம ஜ தா உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
அதற்க்கு ம ஜ தா உறுப்பினர்கள் செவி மடுக்காமல் தொடர்ந்து அமலில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
கர்நாடக சட்டசபை தொடங்கிய பிறகு தினசரி பல்வேறு பிரச்சனைகள் முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக பிஜேபி அரசு ஊழல் அரசு என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர் இதனால் அவை முடங்கியது .
இந்த நிலையில் ஜனதா தளம் எஸ் கட்சியினர் இன்று பிஎம்எஸ் அறக்கட்டளை முறைகேட்டை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். பிஜேபி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது .
கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது