சட்டவிரோதமாக குடியேறியதாக பெங்களூரில் மேலும் 2 பேர் கைது

பெங்களூரு, ஆக. 14: சட்டவிரோதமாக குடியேறியதாக என்ஐஏ புகாரின் பேரில் பெங்களூரில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அளித்த புகாரின் பேரில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை, பெல்லந்தூர் போலீஸார் அப்துல் காதர் தாலுக்தர், கலீல் சப்ராசி மற்றும் முகமது ஜாஹித் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.
அவர்களில் 2 பேரிடம் பெங்களூரில் தங்குவதற்கு தேவையான உரிய‌ ஆவணங்கள் இல்லை. சப்ராசி கடந்த 2011ம் ஆண்டு எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தார். அவர் மற்றொரு சந்தேக நபரான காதருக்கு எல்லையைக் கடக்க‌ உதவி உள்ளார். இந்தியாவுக்குள் நுழைய துலால் என்ற நபரிடம் ரூ.20,000 கொடுத்ததாக ஜாஹித் போலீஸாரிடம் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட இருவரில், ஒருவர் பாஸ்போர்ட் மற்றும் விசா இரண்டையும் வைத்திருக்கிறார்.
ஆனால் மற்றவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது சொந்த ஊரிலிருந்து பிறப்புச் சான்றிதழ் இருப்பதாகவும் கூறுகிறார். 80 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 43 பேர் குறிப்பாக பட்டியலிடப்பட்டு, மீதமுள்ளவர்கள் ‘மற்றவர்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காதர், பலர் எல்லையைக் கடப்பதற்கும், அவர்கள் இந்திய நகரங்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததற்கும், புலம்பெயர்ந்தோருக்கான காவலர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்ததாகவும் எப்ஐஆர் மூலம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் பலரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் தொடர்பு பட்டியல்களில் இருந்து தனிநபர்களின் பட்டியலை என்ஐஏ தொகுத்துள்ளது. இந்த தொடர்புகளில் பெங்களூரில் யாரும் இல்லை” என்று அதிகாரி கூறினார்.

எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் சிலரிடம் தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, கைது செய்யப்படுவதற்கு முன் சரிபார்ப்பு நடத்தப்படும்.