சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 310 பேர் கைது

பெங்களூர், பிப். 14-
சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஜனவரியில் 310 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோத ஆயுத வழக்குகள், ஒழுக்கக்கேடான கடத்தல், உள்ளிட்ட வழக்குகளில் 13 வெவ்வேறு பிரிவுகளில் கீழ், 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்தார்.
போலீஸ் கமிஷனர் தயானந்தா வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை அவர் வெளியிட்டார். இந்த காலகட்டத்தில் போதை மருந்துகள், மனநோய் பொருட்கள் என்கிற என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எட்டு வெளிநாட்டவர், உட்பட 57 பேரை கைது செய்யப்பட்டன. 85 கிலோ எடை அளவில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி ஆகியவற்றின் கீழ் பல்வேறு பிரிவுகளில் நான்கு பேர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டது.
தலைமுறைவாக இருந்த 10 ரவுடிகளை கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. 13 வழக்குகளில் தலைமை தலைமறைவாக இருந்து வந்த சந்தேக நபர்களை போலீசார் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.