சட்ட விரோத மதுபானங்கள் தடுக்க தீவிர கண்காணிப்பு

பெங்களூர், மார்ச் 7- தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சட்ட விரோத மதுபானங்கள் மீது கண்காணிப்பு அதிகரித்துள்ளது. மதுபான விநியோகம் அதிகளவு இருப்பதால் இதனை கருத்தில் கொண்டு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே கட்டுப்பாட்டறைகள் திறக்கப்பட்டு சட்ட விரோத மதுபானங்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது பாட்டில்களை கொண்டு செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மது விற்பனையாளர்களுக்கு தேவை இல்லாத பிரச்சனை ஏற்படுத்த வேண்டாம் என, கர்நாடக மது விற்பனையாளர்கள் சங்கம், மாநில தேர்தல் அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளது.எல்லா மாவட்டங்களிலும், தாலுகாக்களிலும்,
ரோந்து நடத்தி ரசீது அல்லது விலைப்பட்டியல் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மதுபானங்களை கடத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்ய வழக்கு பதிவு செய்யப்படும். தேர்தலின் போது மிக முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படும் சட்ட விரோத மதுபானம் சமீப காலமாக கணிசமாக அதிகரித்து வருகிறது.எனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு சட்டவிரோதமாக மதுக்கடுத்தப்படுவதை கண்காணிக்க தேர்தல் கமிஷன் முன்வந்து கலால் துறைக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.எனவே, தற்போது கலால் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டறைகளை திறந்து முக்கிய சாலைகளில் பேரிகார்டுகள் போட்டு ஆய்வு அல்லது சோதனை நடத்தி வருகிறார்கள்.
லோக்சபா தேர்தல் போல் இல்லாமல், கிராம பஞ்சாயத்து தேர்தலிலும் மது புழுக்கம் அதிகமாவது இப்போதெல்லாம் சகஜம். நகர்ப்புறம் விட கிராமத்தில் அது சற்று அதிகமாக உள்ளது. 2023 அசெம்பிளி தேர்தலின் போது 84 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 847 லிட்டர் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டது.ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவு மது விற்பனை நடந்தது.இந்திய மதுபானம் ஐ.எம்.எல். ஏப்ரலில், 52.90 லட்சம் மே மாதத்தில் 62.35 லிட்டருக்கும், பீர் விற்பனை மே மாதம் 38.59, ஏப்ரலில் 38.29 லிட்டர்களும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு அதிக லாபம் கிடைத்தது. இப்போதும், லோக்சபா தேர்தல் நேரத்தில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் விற்பனை அதிகமாக இருக்கும் எனவே மதுபான இருப்பு வைக்க தயாராகி வருகிறார்கள். கர்நாடக சட்டசபை தேர்தலின் போது மது கடத்தியதாக ஐந்தாயிரம் வழக்குகள் பதிவானது. இதில் பல வழக்குகள் மது விற்பனையாளர் மீதும் வழக்கு பதிவானது.
எனவே, ஆவணங்களை சரி பார்த்து அது உண்மையா கவே சட்ட விரோதமாக இருந்தால் வழக்கு பதிவு செய்ய மதுபான விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 தேர்தலுக்கான பறிமுதல் விபரம் பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதம் மதுபானம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 847 லிட்டர் இதன் மதிப்பு ரூ. 6 கோடி 84 லட்சத்து 54 ஆயிரத்து 606. மொத்த வழக்குகள் பதிவு 1406.