சதி செய்து தம்பி மகன் கடத்தல் : எம்எல்ஏ ரேணுகாச்சார்யா குற்றச்சாட்டு

தாவணகெரே : நவம்பர்.. 3 –
நான்கு நாட்கள் கடந்தும் கண்டுபிடிக்க முடியாத தன்னுடைய தம்பியின் மகனை சூழ்ச்சி செய்து கடத்தியிருப்பதாக ஹொன்னாளி எம் எல் ஏ ரேணுகாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்
சில நாட்களாக என் தம்பி மகன் சந்திரசேகரை பின்தொடர்ந்து சூழ்ச்சி செய்து கடந்த அக்டோபர் 30 அன்று கடத்தப்பட்டுள்ளான் . எந்த பகையால் இவனை கடத்தினார்கள் என்பது தெரிவியவில்லை . ஆனால் அவர்கள் ஏதோ உள்நோக்கத்துடனேயே தம்பி மகனை கடத்தியுள்ளனர். என்றும் ரேணுகாச்சார்யா தெரிவித்துள்ளார். தொகுதி மக்கள் கடவுளை கேட்பது , கடவுளுக்கு பூஜை செய்வது என அனைத்தையும் செய்கிறார்கள் .ஆனாலும் இவ்வளவு நாட்களாகியும் தம்பி மகன் சந்தரசேகர் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இது பல சந்தேகங்களை கிளப்புகிறது. சந்திரசேகரின் கார் அக்டோபர் 30 அன்று இரவு சிவமொக்கா வாயிலாக ஹொன்னாலி மார்கமாக வந்துள்ளது.
ஆனால் கார் ஹொன்னாலியை வந்தடைய வில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.