சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு,மே.12- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம்,
அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
நாளை 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.