Home Front Page News சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: ஏப்ரல் 16 –
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகவான் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் எல்லையில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version