சந்தப்பூரா அருகே சிறுத்தை நடமாட்டம் – பொதுமக்கள் பீதி

பெங்களூரு, ஏப். 2: நேற்று இரவு ஆனேக்கல்-சந்தப்பூரா மெயின் ரோட்டில் உள்ள எஸ்ஆர்ஆர் லேஅவுட் பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடியது பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்ஆர்ஆர் லேஅவுட் பகுதியில் வசிக்கும் பாண்டுரங்கா மற்றும் அவரது மகன் ஷமந்த் ஆகியோர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை ஒன்று சாலையை கடப்பதை பார்த்துள்ளனர். லேஅவுட் பாதுகாப்புக்கு உடனடியாக குடியிருப்பு வாசிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறுத்தை நடமாட்டம் உள்ள இடங்களை சோதனை செய்ததில், சிறுத்தையின் கால்தடங்கள், லேஅவுட்டை சுற்றிலும் காணப்பட்டது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.சிறுத்தைகள் குறித்து அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுத்தையின் கால் தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். சிறுத்தை எந்த திசையில் சென்றது என்பதை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.சிறுத்தையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இன்று இரவு வனத்துறை ஊழியர்கள் மூலம் லேஅவுட்டில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சிறுத்தையின் கால் தடம் தென்பட்டால் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.கடந்த ஆண்டும் கூட நகரின் புறநகர் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த ஆண்டும் சிறுத்தை நடமாட்டம் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.