சந்திரசேகரராவை எதிர்த்து 113 வேட்பாளர்கள் போட்டி

ஹைதராபாத்: நவ.15: தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவை எதிர்த்து கஜ்வேல் தொகுதியில் 113 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைப்போம் என்று பிஆர்எஸ் கட்சி தலைவர்கே. சந்திரசேகர ராவ் நம்பிக்கையுடன் கூறி வருகிறார். மாதம் 4,000உதவித் தொகை, ரூ.500-க்கு காஸ்சிலிண்டர் என காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளும் மக்களை கவர்ந்துள்ளது.இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்றுஇறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 119 தொகுதிகளுக்கு மொத்தம் 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில்வேட்பு மனு பரிசீலனை செய்ததில் 2,898 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள்என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகு மென எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா முதல்வர்சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில் அவரைஎதிர்த்து மொத்தம் 113 பேர் களத்தில் உள்ளனர்.இதேபோன்று இவர்போட்டியிடும் மற்றொரு தொகுதியான காமாரெட்டி தொகுதியில் சந்திரசேகர ராவை எதிர்த்து 57 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.