சந்திரசேகர ராவிடம் நலம் விசாரித்தார் ஆந்திர முதல்வர்

ஹைதராபாத்:ஜன‌. 5
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று காலையில் ஹைதராபாத் சென்றார். அவரை பாரத் ராஷ்டிர சமிதி கட்சியினர் வரவேற்றனர். பின்னர், பஞ்சாரா ஹில்ஸ் நந்தி நகர் பகுதியில் உள்ள தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஓய்வில் இருக்கும் சந்திரசேகர ராவை, ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அதன் பின்னர் இருவரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசியல் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து சுமார் ஒரு மணி நேரம் வரை பேசினர். அப்போது ஜெகனுக்கு சந்திரசேகர ராவ் பல்வேறு அரசியல் அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.