புதுடெல்லி: மார்ச் . 9 -டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மதுபான விற்பனை தொடர்பான கொள்கை 2020-2022-ம் ஆண்டு திருத்தப்பட்டது. இதில் பெரும் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தனியார் துறையினருக்கு உரிமங்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன. இதற்காக சவுத் குரூப் என்ற நிறுவனத்தை சேர்ந்த தொழில் அதிபர் அருண் ராமச்சந்திரன், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்காக அக்கட்சியை சேர்ந்த விஜய் நாயர் என்பவரிடம் ரூ.100 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்த சவுத் குரூப்பில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகர ராவின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மகுண்ட சீனிவாசலு ரெட்டி, தொழில் அதிபர் சரத்ரெட்டி உள்பட பல்வேறு பிரபலங்கள் அங்கம் வகிப்பது தெரிய வந்தது.
இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு டெல்லி கவர்னர் உத்தரவிட்டார். மேலும் மதுபான கொள்கைகளையும் ரத்து செய்தார். இதையடுத்து இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கவிதாவிடம் சி.பி.ஐ. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை நடத்தியது. அவரது முன்னாள் ஆடிட்டரையும் கைது செய்தது. இந்த ஊழலில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சவுத் குரூப்பை சேர்ந்த தொழில் அதிபர் அருண் ராமச்சந்திரனை கடந்த 6-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.